Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஏரி அருகே மது அருந்தினால் நடவடிக்கை; போலீசார் வைத்த எச்சரிக்கை பேனர்

ஏரி அருகே மது அருந்தினால் நடவடிக்கை; போலீசார் வைத்த எச்சரிக்கை பேனர்

ஏரி அருகே மது அருந்தினால் நடவடிக்கை; போலீசார் வைத்த எச்சரிக்கை பேனர்

ஏரி அருகே மது அருந்தினால் நடவடிக்கை; போலீசார் வைத்த எச்சரிக்கை பேனர்

ADDED : ஜூலை 15, 2024 12:10 AM


Google News
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடங்களில், சமூக விரோதிகள், இரவில் மட்டுமின்றி, பக-லிலும், அங்கே மது அருந்துவது போன்ற விரும்பத்தகாத செயல்-களை செய்து வருகின்றனர்.

மேலும், அரூரில் குரங்குபள்ளம், கொளகம்பட்டி, பாளையம் உள்ளிட்ட வனப்பகுதியில் சாலை-யோரத்தில் அமர்ந்து குடிமகன்கள் மது அருந்தி வருகின்றனர். குடிமகன்கள் செய்யும் அட்டகாசத்தால், அப்பகுதியில் பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். தற்போது ஏரி, குளம் உள்-ளிட்ட நீர்நிலைகளிலும் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையாகி விட்டது. மது குடிக்கும் குடிமகன்கள், காலி பாட்-டில்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை அங்கேயே வீசி செல்-வதால், துர்நாற்றம் வீசுவதுடன் நீர்நிலைகள் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடிமகன்கள் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் மது அருந்துவதை தடுக்கும் வகையில், அரூர் போலீசார் அங்கு எச்ச-ரிக்கை பேனர் வைத்துள்ளனர். அதில், இங்கு மது அருந்த அனு-மதியில்லை. மீறினால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்-சரித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us