/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கரும்பில் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலைகரும்பில் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை
கரும்பில் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை
கரும்பில் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை
கரும்பில் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 15, 2024 12:15 AM
அரூர்: அரூரில், கரும்பு பயிர்களில் பூச்சிகளின் தாக்கம் அதிகரித்துள்-ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்படும் கரும்பை, கோபாலபு-ரத்திலுள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் ஒப்பந்தம் செய்து, அரவைக்கு அனுப்புகின்றனர்.
கடந்தாண்டு போதிய மழையின்றி, வறட்சியால் கரும்பு காய்ந்து வருகிறது. இந்நிலையில், கரும்பு பயிரில் மாவுப்பூச்சி தாக்கு-தலால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: அச்சல்வாடி, மொரப்பூர், கடத்துார் உள்-ளிட்ட பல்வேறு இடங்களில், கரும்பு பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. வெள்ளை நிறத்தில் மிகச்சி-றிய அளவிலான மாவுப்பூச்சி கரும்பு சோகை அடியிலிருந்து சோகையின் பச்சை நிறத்தை மாற்றி விடுகிறது. கரும்பின் தண்-டுப்பகுதியில், அதன் நீர்ச்சத்தை உறிஞ்சி விடுவதால், கரும்பில் இருந்து எடுக்கும் சாறு பாதியாக குறைந்து விடுவதால், மகசூல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த முடி-யாததால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். மேலும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையுள்ளது. எனவே, இந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலை நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.