/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பெண்கள் இலவச பயணத்துக்கு புதிதாக 20 டவுன் பஸ்களை துவக்கி வைத்த முதல்வர்பெண்கள் இலவச பயணத்துக்கு புதிதாக 20 டவுன் பஸ்களை துவக்கி வைத்த முதல்வர்
பெண்கள் இலவச பயணத்துக்கு புதிதாக 20 டவுன் பஸ்களை துவக்கி வைத்த முதல்வர்
பெண்கள் இலவச பயணத்துக்கு புதிதாக 20 டவுன் பஸ்களை துவக்கி வைத்த முதல்வர்
பெண்கள் இலவச பயணத்துக்கு புதிதாக 20 டவுன் பஸ்களை துவக்கி வைத்த முதல்வர்
ADDED : ஜூலை 12, 2024 07:24 AM
தர்மபுரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு புதிதாக, 20 அரசு டவுன் பஸ்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஊரக பகுதிகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை நேற்று, தர்மபுரி மாவட்டம் பாளையம்புதுாரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழா நிறைவுக்கு பின், பெண்கள் இலவச பயண திட்டத்திற்காக, தற்போது இயங்கி வரும் பழைய பஸ்களுக்கு பதிலாக, 20 புதிய டவுன் பஸ்களை, பெங்களுரூ - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பாளையம்புதுார் பஸ் ஸ்டாப் பகுதியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், தர்மபுரி மாவட்டத்தில், பொம்மிடி, செக்காரப்பட்டி, கெட்டுபட்டி, நாகர்கூடல், வெள்ளிசந்தை, பென்னாகரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அத்திபள்ளி, பாகலுார், சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, கோவிந்தம்பாளையம், இடைப்பாடி, நாமக்கல் மாவட்டத்தில், காட்டுபுத்துார், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த பழைய பஸ்களுக்கு பதிலாக, புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன.