/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தி.மு.க., நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தி.மு.க., நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தி.மு.க., நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தி.மு.க., நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தி.மு.க., நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்
ADDED : செப் 25, 2025 01:42 AM
அரூர் :தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., வக்கீல் அணி சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம், அரூரில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். வக்கீல் அணி அமைப்பாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
இதில், தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளரும், எம்.பி.,யுமான மணி பேசியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில், அரூர் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற வைப்பது என் தலையாய கடமை.
மண்டல பொறுப்பாளர் அமைச்சர் வேலு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவுரைப்படி, அனைவரும் கடுமையாக உழைத்து வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். தர்மபுரி, பென்னாகரம் தொகுதிகளில் எப்படி தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதோ, அதேபோல், அரூர் தொகுதியிலும் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். தேர்தல் பணி செய்ய முடியாத தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் இப்போதே விலகிக் கொள்ளுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், அரூர் தொகுதி பொறுப்பாளர் குமரேசன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரமோகன், தென்னரசு, சவுந்தரராசு, வேடம்மாள், நிர்வாகிகள் முல்லை செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.