/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை அரூர் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
அரூர் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
அரூர் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
அரூர் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
ADDED : மே 10, 2025 01:53 AM
அரூர், -தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் அமைந்துள்ள, இந்தியன் கல்வி நிறுவனத்தில் இயங்கி வரும், இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2024-25ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் மாநிலம், மாவட்ட அளவில் மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவர் தாரகமூர்த்தி, மாணவி மேவிதா ஆகியோர் தலா, 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவியர் சோபிகா, நிவேதா தலா, 600-க்கு 592 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவர் ரிதுலன் 600-க்கு 590 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழில் 99 மதிப்பெண்கள் 5 பேரும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் 2 பேரும், 100-க்கு 100 மதிப்பெண்கள் இயற்பியலில், 13 பேரும், வேதியியலில் - 6 பேரும், கணிதத்தில் - 10 பேரும், வணிகவியல் 1-மாணவரும் பெற்றுள்ளனர். 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்று உயிரியலில்,- 10 பேரும் பெற்றுள்ளனர்.
மாணவி சுருதிகா இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கட் ஆப் மதிப்பெண்ணில் 200க்கு 200 பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த மாணவர்களை, இந்தியன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பழனிவேல், செயலாளர் தமிழ் முருகன், பொருளாளர் அருள்மணி, முதல்வர் சுபாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.