/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சாலை பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு சாலை பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
சாலை பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
சாலை பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
சாலை பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 13, 2025 01:09 AM
பென்னாகரம், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் புறவழி சாலையான இரண்டு வழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், 16.90 கோடி ரூபாய் மதிப்பில், 2.50 கி.மீ., நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தர்மபுரி கோட்ட பொறியாளர் நாகராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
பென்னாகரம் உதவி கோட்ட பொறியாளர் புருஷோத்தமன், பென்னாகரம் உதவி பொறியாளர் சிங்காரவேலு, மற்றும் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.