/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தக்காளி விலை கடும் சரிவு கிலோ ரூ.14க்கு விற்பனை தக்காளி விலை கடும் சரிவு கிலோ ரூ.14க்கு விற்பனை
தக்காளி விலை கடும் சரிவு கிலோ ரூ.14க்கு விற்பனை
தக்காளி விலை கடும் சரிவு கிலோ ரூ.14க்கு விற்பனை
தக்காளி விலை கடும் சரிவு கிலோ ரூ.14க்கு விற்பனை
ADDED : செப் 13, 2025 01:09 AM
தர்மபுரி, தொடர் மழையால், தக்காளி விலை சரிந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், தக்காளி அதிகம் விளையக்கூடிய பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், தக்காளி வரத்து ஒரே சீராக உள்ளதால், விலை சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆக., 23 அன்று தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 42 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் பிறகு செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து, விலை சரிவடைந்து நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி, 15 ரூபாய், நேற்று, 14 ரூபாய்க்கு விற்பனையானது.