ADDED : ஜூலை 04, 2024 06:00 AM
அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, சுவா-மிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
நந்திக்கு பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. இதேபோல், அரூர் சந்-தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்-மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்த-மலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரை-கோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்-டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்-தர்கள் சுவாமியை வழிபட்டனர்.* தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்-வரர் கோவில் மூலவர் மற்றும் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று மாலை பல்வேறு அபிஷேகம் நடந்தது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லி-கார்ஜூவேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவா-னேஸ்வரர் கோவில், மொடக்கோரி சிவசக்தி சித்தர் பீடம் கோவில், எஸ்.வி.,ரோடு ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், தீயணைப்பு நிலைய வளாக லிங்கேஸ்-வரர் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்-வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்-தது.