/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/நல்லம்பள்ளியில் மீண்டும் தொடங்கிய சாலை பணிநல்லம்பள்ளியில் மீண்டும் தொடங்கிய சாலை பணி
நல்லம்பள்ளியில் மீண்டும் தொடங்கிய சாலை பணி
நல்லம்பள்ளியில் மீண்டும் தொடங்கிய சாலை பணி
நல்லம்பள்ளியில் மீண்டும் தொடங்கிய சாலை பணி
ADDED : ஜூலை 04, 2024 05:58 AM
தர்மபுரி: நல்லம்பள்ளியில் மந்தகதியில் நடந்த பணியால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி படுகின்றனர் என, நம், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, மீண்டும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.நல்லம்பள்ளி பஸ் ஸ்டாபில் இருந்து, லளிகம் செல்லும் சாலை வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்த மார்ச்., 15ல் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு நிதியின் மூலம், கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு, 1.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், மழைநீர் வெளியேறுவ-தற்கான சிறு பாலம் மற்றும் லளிகம் செல்லும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் மந்தகதியில் நடந்ததால் வாகன ஓட்-டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும், மழைநீர் வெளியேற பாலம் கட்ட தோண்டிய பள்-ளத்தில், சாக்கடை நீர் வெளியேற வழியின்றி தேங்கி துர்நாற்றம் வீசியது. இது குறித்த செய்தி நம், 'காலைக்கதிர்' நாளி-தழில் கடந்த, 24 அன்று வெளியானது. இதைய-டுத்து சாலை மற்றும் பாலம் பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.