ADDED : செப் 25, 2025 01:45 AM
தர்மபுரி, இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின், இந்திய சைகைமொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் சதீஸ் தொடங்கி வைத்தார்.
இதில், தர்மபுரி அரசு செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர், செவித்திறன் குறையுடையோருக்கான நலச்சங்கம் சார்பாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்கள், 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கலந்து கொண்டார்.