/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறை விழிப்புணர்வு பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறை விழிப்புணர்வு
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறை விழிப்புணர்வு
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறை விழிப்புணர்வு
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறை விழிப்புணர்வு
ADDED : செப் 25, 2025 01:45 AM
பாப்பிரெட்டிப்பட்டி :தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து
பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் தீயணைப்பு துறை அலுவலர் பிரகாசம், பட்டாசு வெடிக்கும் போது தளர்வான ஆடைகளை அணியக்கூடாது. பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகே, பக்கெட் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, தீக்காயம் ஏற்பட்டால் எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.