ADDED : மே 10, 2025 02:03 AM
தர்மபுரி, தர்மபுரியில் நேற்று பகல் நேரத்தில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை, 6:30 மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. அரைமணி நேரம் பெய்த மழையால், நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஓடியது.
இடி, மின்னலுடன் காற்றும் வீசியதால் நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இருப்பினும், அரைமணி நேரம் பெய்த கனமழையால் வெப்பக்காற்று வீசுவது குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.