/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி; இருவர் மீது வழக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி; இருவர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி; இருவர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி; இருவர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி; இருவர் மீது வழக்கு
ADDED : செப் 26, 2025 02:11 AM
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், முக்கனுாரை சேர்ந்தவர் பிரபாகரன், 47, வக்கீல். இவர், தன் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி வேளாண் உதவி இயக்குனராக இருந்த சுரேஷ்குமார், 53 என்பவரிடம், 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், பிரபாகரன் மனைவிக்கு அரசு வேலையும் கிடைக்கவில்லை. கொடுத்த பணத்தையும் சுரேஷ்குமார் திருப்பி கொடுக்கவில்லை.
இதுகுறித்து கடந்த ஜூன், 13ல், வேளாண் துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்நின்ற சுரேஷ்குமாரிடம், பிரபாகரன் கேட்டபோது, அவர் பணத்தை தர மறுத்து, ஆபாசமாக பேசி சென்றுள்ளார். இதுகுறித்து பிரபாகரன் காவேரிப்பட்டணம் போலீசில் அளித்த புகார் படி சுரேஷ்குமார், அவரது மனைவி ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.