ADDED : செப் 26, 2025 02:11 AM
அரூர் :தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம் எச்.ஈச்சம்பாடியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கீழ்மொரப்பூர், வடுகப்பட்டி ஆகிய பஞ்., களை சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பம் அளித்தனர்.
அதேபோல், வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவி தொகை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்டவை கோரி, பொதுமக்கள் விண்ணப்பம் அளித்தனர். இதில், அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.