ADDED : ஜூன் 13, 2024 07:06 AM

நத்தம்: நத்தம் அருகே செந்துறை - பெரியூர்பட்டி பூமாரியம்மன் கோயில் திருவிழா
ஜூன் 2ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. மாவிளக்கு, அக்னிசட்டி,பால்குடம், பொங்கல் படைத்து நேர்த்திகடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.