/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தோட்டங்களுக்கு செல்லாதீங்க ஒலிபெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை தோட்டங்களுக்கு செல்லாதீங்க ஒலிபெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை
தோட்டங்களுக்கு செல்லாதீங்க ஒலிபெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை
தோட்டங்களுக்கு செல்லாதீங்க ஒலிபெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை
தோட்டங்களுக்கு செல்லாதீங்க ஒலிபெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை
ADDED : ஜூன் 13, 2024 07:07 AM
ஆயக்குடி: பழநி ஆயக்குடி ,ஒட்டன்சத்திரம் வனப்பகுதி அருகே யானைகளை விரட்ட வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க இருப்பதால் விவசாயிகள் விளைநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்து உள்ளது.
ஆயக்குடி சட்ட பாறை, கோம்பைப்பட்டி மலை அடிவாரப் பகுதிகளில் காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. இவற்றை கட்டுப்படுத்த 16 பேர் கொண்ட சிறப்பு வனக்குழு அமைக்கப்பட்டுள்ளது. யானை உள்ள பகுதிகளை கண்டறிந்து இன்று காலை முதல் விரட்டப்பட உள்ளது. வனப்பகுதி அருகே உள்ள விளைநிலங்களுக்கு சொந்தமான விவசாயிகள் யானைகளை விரட்டும் நடவடிக்கையால் விளைநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.