ADDED : ஜூலை 12, 2024 07:54 AM
திண்டுக்கல்: நீர்நிலைகளிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக இலவசமாக மண் எடுத்து செல்ல விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மண் எடுத்திட இணைய வழியில் விண்ணப்பம் செய்து சம்பந்தப்பட்ட தாசில்தார் அளவில் அனுமதி பெற்று சொந்த செலவில் மண், வண்டல் மண், களிமண் எடுத்துக் கொள்ளலாம்.
விவசாய பயன்பாட்டிற்காக மண், வண்டல் மண் எடுத்து செல்ல விண்ணப்பிக்கும் நபர் தங்களது நில ஆவணங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.