ADDED : ஜூன் 28, 2024 12:25 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்தது.ஒட்டன்சத்திரம் அருகே லெக்கையன்கோட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மேம்பாலம் கட்டுவதற்காக லெக்கையன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே சில அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. நேற்று கேரளாவில் இருந்து மதுரைக்கு கெமிக்கல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.