Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்

ADDED : ஜூலை 13, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
பழநி : ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடராஜர் சன்னிதியில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் , பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. புனித நீர் நிரப்பிய கலசங்களுக்கு சிறப்பு யாக பூஜைகள் நடக்க கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்,சிவகாமி அம்மனுக்கு தீபாராதனை , நடராஜர் வீதி உலாவும் நடந்தது. கண்காணிப்பாளர் அழகர்சாமி , பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நத்தம் : -கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நடராஜருக்கு இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.பின்னர் மூலவர் கைலாசநாதர், செண்பகவல்லி தாயார், நடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயிலில் நடராஜர் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us