Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல், கோபால்பட்டி, வடமதுரை, விளாம்பட்டி கோயில்களில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல், கோபால்பட்டி, வடமதுரை, விளாம்பட்டி கோயில்களில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல், கோபால்பட்டி, வடமதுரை, விளாம்பட்டி கோயில்களில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல், கோபால்பட்டி, வடமதுரை, விளாம்பட்டி கோயில்களில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூலை 13, 2024 04:24 AM


Google News
திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகர் ஜெயவல்லி,விஜயவல்லி சமேத வரதராஜ பெருமாள் கோயில்,பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் நாகல்நகர் ஜெயவல்லி,விஜயவல்லி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இதன் வளாகத்தில் சக்கரத்தாழ்வார்,சித்தி விநாயகர்,பாலமுருகன்,விஷ்ணு துர்கை அம்மன்,ராமர்,ஆஞ்சநேயர்,சங்கிலி கருப்பசுவாமி,நவகிரகங்களின் சன்னிதிகளும் உள்ளன. இங்கு திருப்பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது.பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரால் சிறப்பு யாகங்கள் , பூஜைகள் நடந்தது.நேற்று முன்தினம் காலை ஸ்ரீ தேவி,பூதேவி,வரதராஜபெருமாள் உற்ஸவ மூர்த்தி திருமஞ்சன திருவாராதனம் நடந்தது. தொடர்ந்து விமானங்களில் கலச ஸ்துாபி பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை 3ம் காலயாக பூஜைதொடர்ந்து வரதராஜபெருமாள்,பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது வானில் கருடன் வட்டமிட பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி , வேடசந்துார் எம்.எல்.ஏ. காந்தி ராஜன் , சிவ பாலாஜி ஸ்டில்ஸ் உரிமையாளர் டி .கே . சுப்பிரமணியன், டி .எஸ் .சிவப்பிரகாஷ், பால விக்னா வீவிங் மில்ஸ் உரிமையாளர்கள் பிரபு, கிருஷ்ணமூர்த்தி, ரவி, ஓட்டல் ஸ்வாஹத் கிராண்ட் நிர்வாக இயக்குனர் அரசன் சண்முகம் ,சிவானந்த கார்ப்பரேஷன் உரிமையாளர் லோகநாதன், சுபம் பேப்ரிக்ஸ் உரிமையாளர்கள் சிவராமன் ,பாலாஜி, ஸ்ரீ கோகுலம் புட்ஸ் உரிமையாளர் சந்திரசேகரன்,ஸ்ரீ ஜிலேபி கிருஷ்ண ஐயர் மிட்டாய் கடை உரிமையாளர் விஜயகுமார் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் அன்னதானம் ,பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோபால்பட்டி : -கோபால்பட்டி அருகே மொட்டையாகவுண்டன்பட்டி மகா கணபதி கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இவ்விழாவையொட்டி பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள், முளைப்பாரி ஊர்வலமாக கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து மங்கள இசையுடன் அனுக்ஞை, விக்னேஸ்வர்பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி. திக்பந்தனம் மிருச்சங்கிரணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், பஞ்சமாவர்ணபூஜை, தோரணபூஜை வேதபாராயணம், மூலமந்திரம் ஜெபஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடந்தது.

நேற்று காலை யாகசாலை பூஜை தொடர்ந்து மேளதாளம் முழங்க கடன் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ஹரிஹரன் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.

வடமதுரை :வடமதுரை வி.சித்துார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா ஜூலை 10 காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய நிலையில் 4 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாக கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கடலுார் மாவட்டம் மேல் புவனகிரி அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஸ்தானிகர் ஆனந்தகுமார் சிவம் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர்.

நத்தம் :விளாம்பட்டி ஐயன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி விநாயகர் வழிபாடு மகாலட்சுமி ஹோமம், சுதர்சன் ஹோமம், நவகிரக ஹோமம், முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 2ம் கால யாக பூஜை, வேதபாராயணம், மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளும் மகாபூர்ணாகுதி கடம்வலம் வந்த பிறகு கலசங்களுக்கு பூஜைகள் நடந்தது.

20 க்கு மேற்பட்ட புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் யாகசாலையில் இருந்து கோயிலைச்சுற்றி வலம் வர கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us