Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தூர்வாராது தூர்ந்து போன அய்யம்பாளையம் மருதாநதி ஆறு

தூர்வாராது தூர்ந்து போன அய்யம்பாளையம் மருதாநதி ஆறு

தூர்வாராது தூர்ந்து போன அய்யம்பாளையம் மருதாநதி ஆறு

தூர்வாராது தூர்ந்து போன அய்யம்பாளையம் மருதாநதி ஆறு

ADDED : ஜூலை 13, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
தாண்டிக்குடி அய்யம்பாளையம் மருதாநதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியில் வரும் ஆறு ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது. இதை அளவீடு செய்து துார்வாரி அகலப்படுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யம்பாளையம் மருதாநதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக தாண்டிக்குடி அருங்கானல் உள்ளது. இங்கு உருவாகும் மருதாநதி ஆறு சிற்றோடைகளின் அணிவகுப்பிற்கு பின் 30 கி.மீ., நீரோடையில் பயணித்து அணையை சென்றடைகிறது. இந்த அணையின் மூலம் அய்யம்பாளையம் சுற்றுப் பகுதிகளில் நீர்ப்பாசனம், குடிநீர் தேவைகள் சீர் செய்யப்படுகின்றன. பொதுப்பணித்துறை வசமுள்ள இந்த ஆற்றை பராமரிக்காது தூர்வாரததால் இவற்றின் அகலம், ஆழம் குறைந்துள்ளது. ஆற்றுபடுகையை விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளதால் 50 அடி அகலம் 10 அடியாக குறைந்துள்ளது.

சமநிலையில் ஆறு , ரோடு


பன்னீர்செல்வம், விவசாயி ,தாண்டிக்குடி: ஆண்டுதோறும் இந்த ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில் 10 அடிக்கு மேல் ஆழமும், 50 அடி அகலம் கொண்டதாக இருந்தது. விவசாயிகள் சிலர் ஆற்றுப்படுகைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்ய தொடங்க ஆங்காங்கு மோட்டார்கள் அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தியதால் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. மேலும் கஜா புயலின் போது ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஆற்றுப்படுகையில் வண்டல் மண் சூழ்ந்து மண் மேவியது. தொடர்ந்து துார்வாராததால் தற்போது ஆற்றுப் படுகையையும் ரோடும் சமவெளி போன்று உள்ளது.

ஒரு மணி நேரம் மழை பெய்யும் நிலையில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ரோட்டை ஆக்கிரமிக்கிறது. இதனால் வாகனங்கள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினர் ஆற்றை தூர்வாரி அகலப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால் அய்யம்பாளையம் மருதாநதி அணைக்கு செல்லும் தண்ணீர் தங்கு தடை இன்றி சென்று கூடுதல் தண்ணீர் தேக்க முடியும்.

கவனம் செலுத்துவதில்லை


லட்சுமணன், விவசாயி, தாண்டிக்குடி: அய்யம்பாளையம் மருதாநதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு ஆறான இந்த ஆறு குறித்த கண்காணிப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை. உள்ளாட்சி அமைப்புகளும் இதன் மீது கவனம் செலுத்தாததால் இந்த ஆறு துார்வாராத நிலையில் துார்ந்து போய் உள்ளது. 30 கி. மீ., மேல் பயணித்துச் செல்லும் இந்த ஆற்றின் படுகைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடு செய்தால் ஆற்றின் உண்மையான அளவுகோல் தெரிய வரும்.

மேலும் ஆற்றுப் படுகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றி தங்கு தடை இன்றி தண்ணீர் செல்லவும், விவசாய பாசனத்திற்காக மோட்டார்கள் அமைத்து தண்ணீர் எடுக்கும் போக்கையும் கட்டுப்படுத்த வேண்டும். ஆற்றுப் படுகையை துாய்மையாக பராமரித்து துவக்கத்தில் இருந்தது போன்று நன்னீராராக மாற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us