/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கிரிக்கெட் லீக் : திண்டுக்கல் அணி அபார வெற்றி கிரிக்கெட் லீக் : திண்டுக்கல் அணி அபார வெற்றி
கிரிக்கெட் லீக் : திண்டுக்கல் அணி அபார வெற்றி
கிரிக்கெட் லீக் : திண்டுக்கல் அணி அபார வெற்றி
கிரிக்கெட் லீக் : திண்டுக்கல் அணி அபார வெற்றி
ADDED : ஜூன் 28, 2024 12:23 AM
திண்டுக்கல்: 14 வயது உட்பட்டவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளின் முதல் சுற்றில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 14 வயது உட்பட்டவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 20ல் தொடங்கியது.
50 ஓவர்கள் அடிப்படையில் ஒரு நாள் போட்டிகளாக நடக்கும் முதல் சுற்று போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., ஸ்ரீவீ ,ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானங்களில் நடந்தன.
திண்டுக்கல்லில் நடந்த முதல் சுற்று போட்டிகளின் கடைசி நாள் ஆட்டத்தில் திண்டுக்கல், தென்காசி அணிகள் மோதின. பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்காசி அணி 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 69 ரன்கள் எடுத்தது. சேசிங் செய்த திண்டுக்கல் அணி 4 விக்கெட்கள் இழந்து 16.4 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் நெல்லை, விருதுநகர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 49.5 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. ஜெரோம் ஆடம் 36 ரன்களும், கவி முத்துமணி, ஸ்ரீநாத் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
சேசிங் செய்த விருதுநகர் அணி 31 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிரஞ்சன் வீர் 54 ரன்களும், அபுபக்கர் சித்திக் 3 விக்கெட் எடுத்தார்.
முதல் சுற்றுகள் முடிவில் திண்டுக்கல் ,நெல்லை அணிகள் 12 புள்ளிகள் எடுத்து 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றன. விருதுநகர், தேனி அணிகள் 8 புள்ளிகள் எடுத்துள்ளன.