/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உழவர்சந்தையை கடமைக்கு திறப்பதால் அரசு நிதி வீண் உழவர்சந்தையை கடமைக்கு திறப்பதால் அரசு நிதி வீண்
உழவர்சந்தையை கடமைக்கு திறப்பதால் அரசு நிதி வீண்
உழவர்சந்தையை கடமைக்கு திறப்பதால் அரசு நிதி வீண்
உழவர்சந்தையை கடமைக்கு திறப்பதால் அரசு நிதி வீண்

மூடு விழாவை நோக்கி
த.ராமசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்கம், வேடசந்துார்: விவசாயிகள் , பொதுமக்களின் நலன் கருதி வேடசந்துாரில் உழவர் சந்தை அமைக்க அமைச்சர் , கலெக்டரிடம் மனு கொடுத்தோம். 3 மாத காலத்தில் உழவர் சந்தை அமைக்க உத்தரவு கிடைத்தது. உழவர் சந்தைக்கான இடம் தேர்வை முறையாக செய்யவில்லை.
முடக்கத்தால் வருத்தம்
ஆர்.செல்வம்,பொருளாளர், விவசாயிகள் நலச் சங்கம், வேடசந்துார்: உழவர் சந்தை திறந்த விஷயம் விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ சென்றடைய வில்லை. இதனால் உழவர் சந்தைக்கு யாரும் செல்வதில்லை. தற்போது செயல்படாமல் முடங்கி கிடப்பது வருத்தம் அளிக்கிறது. இனிமேலாவது உழவர் சந்தை நிர்வாகிகள், வேளாண் துறை, விவசாய சங்க நிர்வாகிகள் இணைந்து, ஓர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி உழவர் சந்தையை மீண்டும் உயிர்ப்போடு செயல்படுத்த முன்வர வேண்டும் .
கண்துடைப்பாக நடக்கிறது
எம்.பாபுசேட், அ.தி.மு.க., நகர செயலாளர், வேடசந்துார்: வ உழவர் சந்தையை திறப்பது குறித்து யாருக்கும் முறையான தகவல் தெரிவிக்காமல் திறந்த நிலையில் முடங்கி கிடக்கிறது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. செயல்படாத உழவர் சந்தைக்கு அதிகாரி , ஊழியர் என நான்கு பேர் இருப்பதாலும் அரசின் நிதி தொடர்ந்து வீணடிக்கப்படுகிறது.