ADDED : ஜூன் 14, 2024 07:17 AM
வத்தலக்குண்டு: சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் அறையில் அமர்ந்து நில உரிமையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் காமக்காப்பட்டியை சேர்ந்த விவசாயி துரைசிங்கம் குடும்பத்தினர் தங்கள் வசம் வைத்திருந்த 90 சென்ட் விவசாய நிலத்தை மற்றொரு நபருக்கு விற்பனை செய்வதற்கு வத்தலக்குண்டு பதிவாளர் அலுவலகம் வந்தனர். ஏற்கனவே அப்பகுதியில் உள்ள நிலங்கள் விவசாய நிலமாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் துரைசிங்கம் நிலத்தை விவசாய நிலமாக பதிவு செய்ய முடியாது என சார் பதிவாளர் கூறி உள்ளார். 45 நாட்களாக பத்திரம் பதிவு செய்யாமல் அலைக்கழிக்க பட்ட நிலையில் விரக்தி அடைந்த துரைசிங்கம் குடும்பத்தினர் பத்திரத்தை பதிவு செய்ய வலியுறுத்தி சார்பதிவாளர் அறையிலே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். வத்தலக்குண்டு போலீசார் சமாதானம் செய்தனர்.