ADDED : ஜூன் 26, 2024 06:53 AM

திண்டுக்கல் : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரத்தை கண்டித்து திண்டுக்கல்லில் தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணிக்கூண்டு அருகே நடந்த இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் மாதவன் தலைமை வகித்தார். மேற்கு, கிழக்கு மாவட்ட செயலர்கள் சிவக்குமார், ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமோதர கண்ணன் மற்றும் மேற்கு, கிழக்கு மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.