/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 11 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த சிறுவன் மீட்பு 11 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த சிறுவன் மீட்பு
11 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த சிறுவன் மீட்பு
11 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த சிறுவன் மீட்பு
11 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த சிறுவன் மீட்பு
ADDED : ஜூன் 26, 2024 06:53 AM
திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே 11 ஆண்டுகளாக கொத்தடிமையாக ஆடு மேய்த்த சிறுவன் மீட்கப்பட்டார்.
நிலக்கோட்டை அடுத்த ஒருதட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகலிங்கம். இவருக்கு சொந்தமாக 300 ஆடுகள் உள்ளன. இந்த ஆடுகளை நிலக்கோட்டை சுற்று பகுதி விவசாய நிலங்களில் பட்டி அமைத்து அடைத்து வருகிறார். இவரிடம் 11 ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழிலில் மணிகண்டன் 19 ,ஈடுபட்டு வருகிறார்.8 வயது சிறுவனாக இருக்கும்போது பணியில் சேர்ந்த மணிகண்டனுக்கு பண்ணை உரிமையாளரான நாகலிங்கம் ஊதியம் கொடுக்காமல் கொத்தடிமையாக நடத்துவதாக நிலக்கோட்டையைச் சேர்ந்த தன்னார்வலர் அண்ணாதுரை திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புகார் அளித்தார்.
நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி தலைமையிலான அதிகாரிகள் மணிகண்டனை மீட்டு ஆர்.டி.ஓ. ,விடம் ஒப்படைத்தனர். மணிகண்டனின் பெற்றோரை கண்டறியும் பணி நடக்கிறது. அதோடு மணிகண்டனின் மறுவாழ்வுக்கும் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.