/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எல்லாம் திறந்தவெளி... சுகாதாரம் படுமோசம்; சின்னாளபட்டி பேரூராட்சியில் நீடிக்கும் அவலம் எல்லாம் திறந்தவெளி... சுகாதாரம் படுமோசம்; சின்னாளபட்டி பேரூராட்சியில் நீடிக்கும் அவலம்
எல்லாம் திறந்தவெளி... சுகாதாரம் படுமோசம்; சின்னாளபட்டி பேரூராட்சியில் நீடிக்கும் அவலம்
எல்லாம் திறந்தவெளி... சுகாதாரம் படுமோசம்; சின்னாளபட்டி பேரூராட்சியில் நீடிக்கும் அவலம்
எல்லாம் திறந்தவெளி... சுகாதாரம் படுமோசம்; சின்னாளபட்டி பேரூராட்சியில் நீடிக்கும் அவலம்
ADDED : ஜூன் 28, 2024 12:22 AM

சின்னாளபட்டி : சின்னாளபட்டி காமாட்சி காலனியில் திறந்த வெளி கழிப்பிடம், பொது கழிப்பறையிலிருந்து வெளியேறும் அசுத்த நீரால் துர்நாற்றத்துடன் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுகாதாரமற்ற சூழலில் குடிநீர்பிடிக்கும் அவலம் நீடிப்பதாக பெண்கள் குமுறுகின்றனர்.
சின்னாளப்பட்டி பேரூராட்சி முதலாவது வார்டில் உள்ளது காமாட்சி காலனி. முக்கிய தேவையான குடிநீர், தெருவிளக்கு, சுகாதார சுழல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் பல மாதங்களாக இப்பகுதியில் பின்னடைவே நீடிக்கிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் தொற்று அபாய சூழலில் குழந்தைகள் முதியோர் பராமரிக்கப்படும் நிலை தொடர்கிறது.
இங்குள்ள பொது சுகாதார வளாகத்தில் பராமரிப்பதில் தொய்வு காரணமாக சுகாதாரக் கேடான சூழல் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது. செப்டிக் டேங்க் பின்பகுதியில் வேலி அமைக்கப்பட்டுள்ள சூழலில் திறந்த வெளியாக உள்ளது.
சிமென்ட் மூடி இல்லாததால் துர்நாற்றத்துடன் தொற்று பரவும் அபாய சூழலில் இப்பகுதியினர் வசிக்கின்றனர். தெருக்களில் புதர் செடிகள் மண்டியுள்ளன. கொசுத்தொல்லை அதிகரிப்பால் தொற்று பரவல் அபாயம் நீடிக்கிறது.மாவட்ட நிர்வாகம் இப்பகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திறந்த வெளியால் தொற்று அபாயம்
பன்னீர்செல்வம்,பா.ஜ., கிளை செயலாளர், சின்னாளபட்டி : முதலாவது வார்டுக்கு உட்பட்ட சிக்கனம்பட்டி, காமாட்சி காலனி பகுதியில் சாக்கடை சரிவர பராமரிப்பின்றி துார்ந்துள்ளது. கழிவுகள் வெளியேற வழியின்றி தேங்கி கிடக்கிறது.
துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதியை கடந்து செல்ல முடியவில்லை. இங்கு வசிக்கும் மக்களும் சிரமப்படுகின்றனர். மழை காலங்கள் மட்டுமின்றி பிற நேரங்களிலும் அசுத்த காற்றை சுவாசிக்கும் அவல நிலை உள்ளது. சுகாதார வளாகத்தின் செப்டிக் டேங்க் மூடி அமைக்கப்படாமல் திறந்த வெளியாக விடப்பட்டுள்ளது. போதிய கதவுகள் இல்லாததால் சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர் . செக்காபட்டி முதல் சிக்கனம்பட்டி வரை செல்லும் ரோட்டை மகளிர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். தொற்று பரவும் அபாய சூழலில் இப்பகுதியினர் தவிக்கின்றனர்.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
முருகன் ,கூலித்தொழிலாளி, காமாட்சி காலனி : இப்பகுதி பொது சுகாதார வளாகம் தொற்றுநோய் பரப்பும் மையமாக மாறியுள்ளது.
காலை, இரவு நேரங்களில் அதிக துர்நாற்றம் வீசுகிறது. மழை, காற்று போன்ற சூழலில் இப்பகுதியில் குடியிருக்க முடியாத அளவிற்கு அசுத்தக்காற்று சூழ்ந்து விடுகிறது. சாக்கடையை பராமரித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. பல இடங்களில் சாக்கடை முழுவதும் கழிவுகள் நிரம்பிக் கிடக்கிறது. பாதசாரிகள் இவ்வழியே செல்ல முடியாத அவல நிலை உள்ளது. சுகாதார ஊழியர்கள் மட்டுமின்றி கண்காணிப்பிற்கான அதிகாரிகளும் இப்பகுதியை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். முதியோர் பெண்கள் குழந்தைகள் அடிக்கடி நோய் பாதிப்பிற்கு உள்ளாகும் அவலமும் தொடர்கிறது.
நடவடிக்கை தேவை
தாயம்மாள் குடும்பத் தலைவி, சிக்கனம்பட்டி : முதலாவது வார்டு அடிப்படை வசதிகள் அளிப்பதில் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக மாறிவிட்டது. மனிதர்கள் வசிப்பதற்கான சூழலில் பொது சுகாதாரம் படுமோசமாக உள்ளது. பொது சுகாதார வளாகம் செல்வோருக்கு அங்குள்ள பராமரிப்பற்ற சூழலில் வாந்தி, மயக்கம் தான் வருகிறது.
இதன் எதிரில் உள்ள தண்ணீர் வினியோக தொட்டி சேதமடைந்து பல வாரங்களாகியும் சீரமைக்கவில்லை. அதிக குடிநீர் வீணாககிறது. பராமரிப்பற்ற சூழலில் சுகாதார சீர்கேடுகளுடன் இப்பகுதியினர் வசிக்கின்றனர். தெருக்களில் புதர் செடிகள் மண்டியுள்ளன. கொசுத்தொல்லை அதிகரிப்பால் தொற்று பரவல் அபாயம் நீடிக்கிறது.