' கொடை' யில் கொட்டி தீர்த்த கனமழை
' கொடை' யில் கொட்டி தீர்த்த கனமழை
' கொடை' யில் கொட்டி தீர்த்த கனமழை
ADDED : ஜூலை 12, 2024 11:23 PM

கொடைக்கானல்:கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப் பகுதியில் 5 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான இங்கு சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று காலை சுட்டெரிக்கும் வெயில் பளிச்சிட்டது. மதியத்திற்கு பின் வானம் மேகமூட்டத்துடன் காண கனமழை பெய்ய தொடங்கியது. மதியம் 2:00 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7:00 மணி வரை நீடித்தது. ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. சுற்றுலா பயணிகள் விடுதிகளிலே முடங்கினர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. கொடைக்கானல் மேல்மலை , கீழ் மலைப் பகுதியில் மழையால் மின்தடை ஏற்பட மலை கிராமங்கள் இருளில் மூழ்கின .