Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கட்டி முடிக்காமலே திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறந்த வெளியில் தவிக்கும் சின்னாளபட்டி பயணிகள்

கட்டி முடிக்காமலே திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறந்த வெளியில் தவிக்கும் சின்னாளபட்டி பயணிகள்

கட்டி முடிக்காமலே திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறந்த வெளியில் தவிக்கும் சின்னாளபட்டி பயணிகள்

கட்டி முடிக்காமலே திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறந்த வெளியில் தவிக்கும் சின்னாளபட்டி பயணிகள்

ADDED : ஜூலை 17, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
சின்னாளபட்டி : சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளில் தொய்வு நீடிக்கும் நிலையில் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாக அலட்சியத்தால் விபத்து அபாய சூழலில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சின்னாளபட்டி பேரூராட்சி உட்பட தமிழகத்தில் 10 இடங்களில் , பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிக்காக 25 கோடி ரூபாயை உள்ளூர் திட்டக்குழு அனுமதி பெறாமல் அவசர கோலத்தில் செப்டம்பரில் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின. 11 மாதங்களாகியும் 60 சதவீத பணிகள் கூட முடிக்கப்படாத சூழலில் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்தது. குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. பயணிகள் திறந்த வெளியில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படும் பஸ்களால் பயணிகள் விபத்துக்குள்ளாகும் அவலமும் தொடர்கிறது. இவற்றை களையும் நடவடிக்கையில் பேரூராட்சியின் அலட்சியம் நீடிக்கிறது.

ஆமை வேக பணி


இளங்கோவன், தே.மு.தி.க. அவைத் தலைவர், சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் விரிவாக்க பணிகள் முடியும் முன்பே பஸ் ஸ்டாண்டை திறந்து விட்டுள்ளனர். அடிப்படை வசதிகளை பெயரளவில் கூட இல்லை. பஸ்கள் நிறுத்துவதற்கான பிளாட்பார வசதி இல்லை. குறுக்கும் நெடுக்குமாக விரும்பிய இடங்களில் நிறுத்திக் கொள்கின்றனர். வெளிநபர்களின் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்துகின்றனர். தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. கழிப்பறைக்காக பயணிகள் அவதி பல மாதங்களாக தொடர்கிறது. முறையான திட்டமிடலின்றி பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கிறது.

---பணம் வீணடிப்பு


வைரமுத்து, ஜவுளி வியாபாரி, சின்னாளபட்டி : அரசு பணத்தை வீணாக்கி வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் மகளிர் மட்டும் இன்றி குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பயணிகள் சுற்றுப்புரத்தையும் புளிய மரத்தின் மறைவையும் திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர் .துர்நாற்றம் மட்டுமின்றி சுகாதார க்கேடு ஏற்படும் அவலம் நீடிக்கிறது. இப்பகுதியில் இருந்து அகற்றப்பட்ட மரங்கள், கற்கள், தளவாட பொருட்களை முறையாக ஏலம் விட்டு அப்புறப்படுத்தவில்லை. விரிவாக்க திட்ட பணிகளில் ஏராளமான முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன.

அரசு பஸ்கள் புறக்கணிப்பு


மனோகரன், பா.ஜ., ஆத்தூர் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர்: சில மாதங்களுக்கு முன் சின்னாளபட்டி பிரிவு வழியே செல்லும் பள்ளபட்டி, கொடைரோடு, நிலக்கோட்டை அரசு டவுன் பஸ்கள் அனைத்தும் சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட் வரை இயக்கப்பட்டன. தற்போது இவை சின்னாளபட்டி உள்ளே செல்வதில்லை. கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் பாதிப்படைந்துள்ளனர். முந்தைய தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்துமிடத்தை முறைப்படுத்தவில்லை. அவசர கோலத்தில் பஸ் ஸ்டாண்டை திறந்தபோதும் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. கர்ப்பிணிகள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். --





      Our Apps Available On




      Dinamalar

      Follow us