/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சுகாதாரமில்லாத சமோசா கடைகளுக்கு சீல் சுகாதாரமில்லாத சமோசா கடைகளுக்கு சீல்
சுகாதாரமில்லாத சமோசா கடைகளுக்கு சீல்
சுகாதாரமில்லாத சமோசா கடைகளுக்கு சீல்
சுகாதாரமில்லாத சமோசா கடைகளுக்கு சீல்
ADDED : ஜூன் 15, 2024 06:35 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் தெற்குரத வீதியில் சுகாதாரமில்லாமல் சமோசா தயாரித்து விற்பனை செய்ததாக 2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் டீக்கடைகள், சமோசா கடைகள் செயல்படுவதாக திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் மாநகர நல அலுவலர் பரிதாவாணி,சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி,பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். நாராயண பிள்ளை சந்து பகுதியில் செயல்பட்ட 2 சமோசா கடைகளில் சுகாதாரமில்லாது தரையில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் அதன் கடைகளை பூட்டி சீல் வைத்தனர். தலா ரூ.5000 அபராதம் விதித்தனர்.