/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாவட்டத்தில் நீர்பாசனதிட்ட பணி ஆய்வு மாவட்டத்தில் நீர்பாசனதிட்ட பணி ஆய்வு
மாவட்டத்தில் நீர்பாசனதிட்ட பணி ஆய்வு
மாவட்டத்தில் நீர்பாசனதிட்ட பணி ஆய்வு
மாவட்டத்தில் நீர்பாசனதிட்ட பணி ஆய்வு
ADDED : ஜூன் 28, 2024 12:11 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் சாணார்பட்டி, வடமதுரை, வேடசந்துார், தொப்பம்பட்டி, குஜிலியம்பாறை வட்டாரங்களில் உள்ள 33 நீர்வடிப்பகுதி கிராமங்களில் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் தடுப்பணை, பண்ணைக்குட்டை நீர் செறிவூட்டும் குழிகள், அமுங்கு குட்டை, பழத்தோட்டம் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு வேளாண் இணை இயக்குநர் அனுசியா ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை துணை இயக்குநர் உமா, உதவிப்பொறியாளர் செல்லமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.