/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆசிரியர்கள் மாற்றுப்பணி கலந்தாய்வு ஆசிரியர்கள் மாற்றுப்பணி கலந்தாய்வு
ஆசிரியர்கள் மாற்றுப்பணி கலந்தாய்வு
ஆசிரியர்கள் மாற்றுப்பணி கலந்தாய்வு
ஆசிரியர்கள் மாற்றுப்பணி கலந்தாய்வு
ADDED : ஜூன் 28, 2024 12:11 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது.
ஒட்டன்சத்திரம் தொடக்கக் கல்வி மாவட்டத்திலுள்ள 7 வட்டாரங்களைச் சேர்ந்த அரசு உதவிப் பெறும் பள்ளி உபரி ஆசிரியர்கள் 54 பேருக்கு ஒட்டன்சத்திரத்திலும், திண்டுக்கல் தொடக்கக் கல்வி மாவட்டத்திலுள்ள 8 வட்டாரங்களைச் சேர்ந்த 205 ஆசிரியர்களுக்கு திண்டுக்கல்லிலும் நேற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.
ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டத்தில் 41 காலிப் பணியிடங்களில், 38 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. குஜிலியம்பாறையில் 3 இடங்கள் நிரப்பப்படவில்லை. இதேபோல் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 82 காலிப் பணியிடங்களுக்கும் மாற்றுப் பணி வழங்கப்பட்டது.