/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பராமரிப்பு இல்லாது நீர்வரத்தை இழந்த தும்மினிக்குளம் பராமரிப்பு இல்லாது நீர்வரத்தை இழந்த தும்மினிக்குளம்
பராமரிப்பு இல்லாது நீர்வரத்தை இழந்த தும்மினிக்குளம்
பராமரிப்பு இல்லாது நீர்வரத்தை இழந்த தும்மினிக்குளம்
பராமரிப்பு இல்லாது நீர்வரத்தை இழந்த தும்மினிக்குளம்

-- தரிசுகளாகும் கொடுமை
பி.கே.பி.குமரேசன், கம்யூ., விவசாய சங்க ஒன்றிய செயலாளர், வேங்கனுார்: தும்மனிக்குளம் மூலம் 1,500 ஏக்கருக்கு மேல் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. பல ஆண்டுகளாக வாய்க்கால் பராமரிக்கப்படவில்லை. இதனால் கெங்கையூர் தடுப்பணையில் இருந்து நீர் வரத்து குளத்திற்கு வருவது முற்றிலும் தடைப்பட்டுள்ளது. குளத்தை மீட்க பல ஆண்டுகளாக சட்ட போராட்டத்தையும் தொடர்ந்துள்ளோம். வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிப்பு திட்டத்தை வலியுறுத்தும் அரசு ஒரு ஊருக்கே மழை நீரை சேகரித்து வழங்கும் தும்மனிக்குள விஷயத்தில் பாராமுகமாக உள்ளது. எங்கள் நிலங்கள் எல்லாம் தரிசுகளாகும் கொடுமை அரங்கேறி கொண்டு வருகிறது.
உயரத்தை அதிகரியுங்க
சி.கே.வேங்கன், மா.கம்யூ., விவசாய சங்க ஒன்றிய தலைவர், அய்யலுார்: வாய்க்கால் பாதையில் அதிகளவில் புதர்கள் வளர்ந்துள்ளன. தடுப்பணையை முறையாக துார்வாரி மறுகட்டமைக்க வேண்டும். குளத்தை முறையாக துார் வார வேண்டும். ரோடு அமைந்ததால் குறுகிய இடங்களில் தனியார் இடங்களை பெற்று தடையின்றி நீர் செல்லும் ஓடையை அகலமாக்குவது அவசியம். குறுகலான இடங்களில் கான்கிரீட் கட்டுமானமாக வடிவமைக்க வேண்டும். அப்போது மண் சரிவு போன்ற சிக்கல்கள் ஏற்படாது. தடுப்பணையின் உயரம் குறைவாக இருப்பதால் குளத்திற்கு நீர் திருப்ப தடுப்பணையின் மீது மண் கரை அமைக்க வேண்டியுள்ளது. தடுப்பணையின் உயரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்.
வாய்ப்பை இழந்தோம்
எஸ்.சிவக்குமார், விவசாயி, வேங்கனுார்: நில அளவீடு பணிபோது 37 ஏக்கருக்கு பதில் 22 ஏக்கர் நிலமே நீர்பிடிப்பு பகுதியாக இருப்பது தெரிந்தது. கோம்பை வரட்டாற்றின் துவக்க இடத்தில் முதல் குளமாக இருக்கும் அய்யலூர் தும்மனிக்குளம் வாய்க்கால் பராமரிப்பு இல்லாததால் நீர் பெறமுடியாமல் உள்ளது. தும்மினிக்குளம் நிரம்பினால் மறுகாலில் அமைந்துள்ள தீத்தாகிழவனுார், வேங்கனுார் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.