Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஏன் இந்த பாரபட்சம்: முறையாக இயக்கப்படாத அரசு டவுன் பஸ்கள்: கண்காணிப்பும் இல்லாமல் மாணவர்கள் அவதி

ஏன் இந்த பாரபட்சம்: முறையாக இயக்கப்படாத அரசு டவுன் பஸ்கள்: கண்காணிப்பும் இல்லாமல் மாணவர்கள் அவதி

ஏன் இந்த பாரபட்சம்: முறையாக இயக்கப்படாத அரசு டவுன் பஸ்கள்: கண்காணிப்பும் இல்லாமல் மாணவர்கள் அவதி

ஏன் இந்த பாரபட்சம்: முறையாக இயக்கப்படாத அரசு டவுன் பஸ்கள்: கண்காணிப்பும் இல்லாமல் மாணவர்கள் அவதி

ADDED : ஜூன் 13, 2024 07:09 AM


Google News
அரசு பள்ளி ,கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரும்பாலானோர் அரசு டவுன் பஸ்களை மட்டுமே நம்பி உள்ளனர். காலை , மாலை நேரங்களில் கூடுதலான கூட்டம் இருந்தாலும் பள்ளி கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி வேலைக்கு செல்வோரும் பஸ்களில் செல்கின்றனர்.

இந்நிலையில் அரசு டவுன் பஸ்கள் கிராமப் பகுதிகளில் முறையாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது வலுவாக எழுந்துள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது .

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்படும் அரசு பஸ் குஜிலியம்பாறை ஆர்.வெள்ளோடு, ஆலம்பாடி, கோட்டநத்தம் வழியாக 8:45 மணிக்கு பாளையம் செல்லும். இந்த பஸ் தற்போது வருவதில்லை.

இதனால் ஆர்.வெள்ளோடு, சி.சி.குவாரி, சேர்வைக்காரன்பட்டி, பாளையம் அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், நடந்தே செல்கின்றனர். இதேபோல் பள்ளி விட்டு, வீட்டிற்கு வர வேண்டிய மாலை நேரத்திலும் பஸ் வசதி நிறுத்தப்பட்டு விட்டது.

குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மல்லபுரம் பல்லாநத்தம் வழியாக ஈசநத்தம் வரை செல்லும் அரசு டவுன் பஸ்சும் தற்போது இயக்குவது இல்லை.

இது போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு டவுன் பஸ் போக்குவரத்து முறையாக இல்லாததால், ஆர்ப்பாட்டம் செய்வது தொடர் கதையாக உள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வழித்தடங்களில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் முறையாக இயங்குகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். இயங்காத பட்சத்தில் தரமான பஸ்களை முறையாக இயக்க தேவையான நடவடிக்கை வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us