Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பருமரத்துப்பட்டியில் கும்பாபிஷேகம்

பருமரத்துப்பட்டியில் கும்பாபிஷேகம்

பருமரத்துப்பட்டியில் கும்பாபிஷேகம்

பருமரத்துப்பட்டியில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 13, 2024 07:08 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே பருமரத்துப்பட்டியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகம், 8 வீடு மங்கள மகரிஷி கோத்திரம் சார்ந்த மக்கடவர் குலப்பங்காளிகளின் குலதெய்வம் ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

முதல் நாள் அன்று மங்கள வாத்தியம் முழங்க மஹா சுதர்ஸன ஹோமம் நடந்தது. தொடர்ந்து புண்ணிய வாசனம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், மண்டல கும்ப பூஜை நடந்தது. இரண்டாம் நாள் அன்று பகவத் அனுக்ஞை, சங்கல்பம், விஷ்வக்சேன ஆராதனம், காயத்ரி ஹோமம் நடந்தது. நேற்று நான்காம் காலம், கடம் புறப்பாடு நடந்தது. மூலவர் விமானம், ராஜகோபுரம் சகல பரிவார தேவதைகளுடன் ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் கலசங்களில் புண்ணிய தீர்த்தங்கள் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. நிவேதனம், வேத்திவ்ய பிரபந்த சாத்து முறை, பஞ்சதரிசனம், எஜமானர் மரியாதை, தீபாராதனை நடந்தது. அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us