ADDED : அக் 23, 2025 03:57 AM
பழநி: பழநி நகரில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் சோதனையில் 20 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பழநி நகரில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது .இதையடுத்து சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், நகர் நல அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். பெரியார் சிலை அருகே உள்ள கடைகளில் அழுகிய மீன்கள் இருப்பதை கண்டறிய 20 கிலோ அழுகிய மீனை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.
மேலும் தடை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய இரண்டு கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


