/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அபிராமி அம்மன் சிலை பூஜை தொடர்கிறது நிர்வாகிகள் கைது அபிராமி அம்மன் சிலை பூஜை தொடர்கிறது நிர்வாகிகள் கைது
அபிராமி அம்மன் சிலை பூஜை தொடர்கிறது நிர்வாகிகள் கைது
அபிராமி அம்மன் சிலை பூஜை தொடர்கிறது நிர்வாகிகள் கைது
அபிராமி அம்மன் சிலை பூஜை தொடர்கிறது நிர்வாகிகள் கைது
ADDED : மார் 21, 2025 05:45 AM
வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் அபிராமி அம்மன் சிலைக்கு பூஜை நடத்தி கிராமங்கள் தோறும் ஊர்வலம் எடுத்து சென்று பூஜைகள் செய்ய போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். இதை கண்டித்து போராடிய ஹிந்து முன்னணி நிர்வாகிகள் 4 பேரை 12 நாளுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேடசந்துார் குங்குமக்காளியம்மன் கோயில் தெருவில் திண்டுக்கல் அபிராமி அம்மன் பக்தர்கள் பாதுகாப்பு குழு சார்பில் மார்ச் 7 ல் அபிராமி அம்மன் சிலையை வைத்து வழிபாடு, ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர்.
போலீசார் அனுமதி மறுத்தனர். அம்மனை தரிசிக்க வந்த 70 பேரை போலீசார் கைது செய்தனர். 65 பேரை அன்று இரவே விடுவித்தனர்.
ஹிந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் மாரிமுத்து, தலைவர் ராஜா, நிர்வாகிகள் கோம்பை கணேசன், அய்யலுார் சதீஷ் ஆகிய 5 பேரை சிறையில் அடைத்தனர். 10 நாட்கள் சிறையில் இருந்த அவர்கள் தற்போது ஜாமின் பெற்றுள்ளனர். இந்நிலையில் இதே வழக்கில் இரு நாட்களுக்கு முன்பு தாடிக்கொம்பு வினோத்ராஜ், நாகேந்திரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நேற்று வடமதுரையை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், வேடசந்துார் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.