Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம்களை ஏற்படுத்தலாமே; அவசியமாகிறது ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை

கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம்களை ஏற்படுத்தலாமே; அவசியமாகிறது ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை

கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம்களை ஏற்படுத்தலாமே; அவசியமாகிறது ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை

கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம்களை ஏற்படுத்தலாமே; அவசியமாகிறது ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை

ADDED : மார் 21, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல், நிலக்கோட்டை, பழநி, வத்தலக்குண்டு, தாடிக்கொம்பு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கோயில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவைகளை கண்காணிக்க உதவி ஆணையர், செயல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் உள்ளன.

இந்நிலையில் விழாக்காலங்களில் பழநி முருகன் கோயில், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட பிரசித்த பெற்ற கோயில்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். சாதார நாட்களிலும் கூட்டம் அதிகளவில் இருப்பதால் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர்.

நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம், உடல் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் செய்வதறியாது பக்தர்களும் தவிக்கின்றனர்.

ஒருசில பிரசித்த பெற்ற கோயில்களில் பக்தர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மற்ற கோயில்களில் இதுபோன்ற எந்த வசதிகளும் இல்லை. இதனால் பக்தர்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் போது பல பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை கொடுக்கும் வகையில் மருத்துவ வசதியை எப்போதும் செயல்படும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மீது மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us