ADDED : செப் 26, 2025 02:18 AM
ஆயக்குடி: பழநி அருகே ஆயக்குடியில் செயல்பட்டு வரும் பிரபல கார் ஷோரூமில் நள்ளிரவில் காரை திருடிச் சென்ற நபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிச.5.ல் பழநி - திண்டுக்கல் ரோட்டில் ஆயக்குடி அருகே பிரபல கார் விற்பனை ஷோரூமுக்குள் புகுந்து, கண்காணிப்பு கேமரா, ஹார்ட் டிஸ்க், உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீல நிற சொகுசு காரை, முன்புறம் உள்ள கண்ணாடி கதவை காரில் உடைத்து திருடி சென்றார்.
ஆயக்குடி போலீசார் ஒட்டன்சத்திரம், ஸ்ரீராமபுரம் அருகே வெள்ளமடத்துபட்டி பகுதியில் கார் நின்றிருந்ததை கண்டறிந்து திருட்டில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் 25, என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிவகுமாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி பொன்பாண்டி உத்தரவிட்டார்.