ADDED : செப் 26, 2025 02:18 AM

நத்தம்:நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரிகளின் மாணவர்கள் நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பாக நெகிழி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நத்தம் என்.பி.ஆர்., பொறியியல்,தொழில்நுட்ப மற்றும் கலை,அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம், நத்தம் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து நத்தம் அம்மன் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று குப்பைகளை சேகரித்தல்,நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்திகா, சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் சித்ரா மேரி, கனகராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் குன்றக்குடியான் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
60 மாணவர்கள் 30 கிலோவுக்கும் மேற்பட்ட நெகிழியினை சேகரித்து சுத்தம் செய்தனர். ஏற்பாடுகளை என்.பி.ஆர்., கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.