/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 31 வெளிநாட்டவருக்கு சிறை ஒட்டன்சத்திரம் நீதிமன்றம் தீர்ப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 31 வெளிநாட்டவருக்கு சிறை ஒட்டன்சத்திரம் நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 31 வெளிநாட்டவருக்கு சிறை ஒட்டன்சத்திரம் நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 31 வெளிநாட்டவருக்கு சிறை ஒட்டன்சத்திரம் நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 31 வெளிநாட்டவருக்கு சிறை ஒட்டன்சத்திரம் நீதிமன்றம் தீர்ப்பு
ADDED : செப் 26, 2025 03:00 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 31 வெளிநாட்டவருக்கு சிறை தண்டனையுடன் அபராதம் விதித்து ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் அருகே வாகரை கிராமத்தில் உள்ள தனியார் மில்லில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கி பணிபுரிந்து வருவதாக 2025 மே., மாதம் தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் தணிக்கையில் ஒரு சிறார் உட்பட 31 வங்க தேசத்தினர் இருப்பது உறுதியானது. அவர்களை கள்ளிமந்தயம் போலீசார் கைது செய்தனர்.
சிறுவனை மதுரை காப்பகத்திலும், 30 பேரை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர். இந்த வழக்கு ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.
சிறுவன், மற்றும் மற்றொரு நபர் வழக்கு தனியாகவும், மற்ற 29 பேர் வழக்கு தனியாகவும் பிரிக்கப்பட்டது.
முதல் வழக்கில் செப்.11ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருவரும் சிறையில் இருந்த 115 நாட்களை தண்டனையாகவும் தலா ரூ.100 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
2ம் வழக்கில் நேற்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 29 பேரும் சிறையில் இருந்த 125 நாட்களை தண்டனைகாலமாக அறிவித்தும் தலா ரூ.100 அபராதமாக விதித்தும் நீதிபதி கபாலீஸ்வரன்தீர்ப்பு கூறினார்.
ஆனால் சட்டவிரோத குடியேறிகள் என்பதால் நாடுகடத்தல் உத்தரவு வரும் வரை சிறுவன் காந்திகிராமம் காப்பகத்திலும், மற்ற அனைவரும் மீண்டும் புழல் சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.
அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.