ADDED : செப் 26, 2025 02:58 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் சரவணக்குமார். 2011ல் இவரை, முன்விரோதம் காரணமாக நிலக்கோட்டை வள்ளி நகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (எ) லிங்கசாமி 52 என்பவர் உட்பட 4 பேர் சேர்ந்து கொலை செய்தனர். நிலக்கோட்டை போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் சூசை ராபர்ட் வாதாடினார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் நபரான வேலு என்ற வேல்முருகன் இறந்துவிட்டார். 2ம் குற்றவாளியான மகாலிங்கம் (எ) லிங்கசாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.50,500 அபராதமும் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட தர்மர் என்ற விஜி, சுந்தரம் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.