/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பணி சுமையால் விபத்தில் சிக்கிய துணை தாசில்தார் பணி சுமையால் விபத்தில் சிக்கிய துணை தாசில்தார்
பணி சுமையால் விபத்தில் சிக்கிய துணை தாசில்தார்
பணி சுமையால் விபத்தில் சிக்கிய துணை தாசில்தார்
பணி சுமையால் விபத்தில் சிக்கிய துணை தாசில்தார்
ADDED : செப் 24, 2025 05:57 AM
ரெட்டியார்சத்திரம் : பணி சுமை, மன உளைச்சலுடன் ரெட்டியார்சத்திரத்தில் நடந்த கல்வி அமைச்சர் நிகழ்ச்சிக்கு சென்ற துணை தாசில்தார் விபத்தில் சிக்கினார்.
திண்டுக்கல் ராஜக்காபட்டியை சேர்ந்தவர் மரியசூசை 45. திண்டுக்கல் மேற்கு தாலுகாவில் மண்டல துணை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். ரெட்டியார்சத்திரம் அருகே நடந்த கல்வி அமைச்சர் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு டூ வீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. ரெட்டியார்சத்திரத்தில் வேன் மோதி பலத்த காயமடைந்தார்.
மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரெட்டியார்சத்திரம் போலீசார் வேன் டிரைவர் பார்த்தசாரதியை 36, கைது செய்து விசாரிக்கின்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம்கள் சார்ந்த பணிகள் வழங்கப்படுகிறது. இவை தவிர நடவடிக்கை நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை, உயரதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. தேர்தலுக்கான பூத் பிரிப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், புள்ளியியல் துறைக்காக சிறு பாசன கணக்கெடுப்பு, மகளிர் உரிமை தொகை விவசாய சார்ந்த சான்றிதழ் தொடர்பான நேரடி கள விசாரணைக்கு செல்ல வேண்டி உள்ளது. வருவாய்த்துறைக்கு தொடர்பு இல்லாத நிகழ்ச்சிகளுக்கும் உயர் அதிகாரிகளால் அனுப்பப்படுகின்றனர். இது போன்ற பணி சுமையால் கவன சிதறலால் வருவாய்த்துறையினர் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது' என்றனர்.