/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்--மதுரை ரோட்டில் தொடரும் விபத்துக்கள் தனியாருக்காக மூடப்பட்ட நீர் வழித்தடங்கள் திண்டுக்கல்--மதுரை ரோட்டில் தொடரும் விபத்துக்கள் தனியாருக்காக மூடப்பட்ட நீர் வழித்தடங்கள்
திண்டுக்கல்--மதுரை ரோட்டில் தொடரும் விபத்துக்கள் தனியாருக்காக மூடப்பட்ட நீர் வழித்தடங்கள்
திண்டுக்கல்--மதுரை ரோட்டில் தொடரும் விபத்துக்கள் தனியாருக்காக மூடப்பட்ட நீர் வழித்தடங்கள்
திண்டுக்கல்--மதுரை ரோட்டில் தொடரும் விபத்துக்கள் தனியாருக்காக மூடப்பட்ட நீர் வழித்தடங்கள்
ADDED : செப் 24, 2025 05:58 AM

சின்னாளபட்டி : திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலையில் பெயரளவு பராமரிப்பு பணிகளால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், திருட்டு உள்ளிட்ட பிரச்னைகளால் பலரும் பாதிப்படைகின்றனர்.
2011 முதல் இந்த 4 வழிச்சாலை செயல்பாட்டிற்கு வந்தது. வழக்கமான வாகனங்கள் மட்டுமின்றி கொடைரோடு அருகே மெட்டூரில் இருந்து மூலச்சத்திரம் வழியே செல்ல வேண்டிய வாகனங்களில் பெரும்பாலானவை தற்போது இத்தடத்தில் செல்கின்றன. வாகன போக்குவரத்திற்கேற்ப ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
தற்போது இவற்றின் பராமரிப்பில் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அலட்சியம் காட்டுகிறது. பல வசதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சி பொருளாக உள்ளன. வாய்க்கால்கள் பராமரிப்பின்றி துார்ந்து கிடக்கின்றன. அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் நீராதாரங்களுக்கான வரத்து நீர் வழித்தடம் துண்டிக்கப்பட்டு உள்ளது. குறுகலான குழாய் பாலங்கள் அமைத்து தீராத போக்குவரத்தை பாதிக்கும் அம்சங்கள் அதிகரித்துள்ளன. வாகன ஓட்டிகளுக்கான வசதிகளை அளிப்பதில் கடும் தொய்வு நிலவுகிறது. பெயரளவில் அவ்வப்போது ரோடு சீரமைப்பு பணி நடக்கிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நீடிக்கும் அலட்சியத்தால் நெரிசல், விபத்து அபாயம் தாராளமாகிவிட்டது.