/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாவட்ட கிரிக்கெட்: பார்வதீஸ் பள்ளி வெற்றி மாவட்ட கிரிக்கெட்: பார்வதீஸ் பள்ளி வெற்றி
மாவட்ட கிரிக்கெட்: பார்வதீஸ் பள்ளி வெற்றி
மாவட்ட கிரிக்கெட்: பார்வதீஸ் பள்ளி வெற்றி
மாவட்ட கிரிக்கெட்: பார்வதீஸ் பள்ளி வெற்றி
ADDED : செப் 16, 2025 04:48 AM
திண்டுக்கல்: பிரசித்தி வித்யோதயா பள்ளி நடத்தும் மாவட்ட அளவிலான சி.பி.எஸ்.இ, பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பார்வதீஸ் பள்ளி வெற்றி பெற்றது.
இதற்கான போட்டிகள் ரிச்மேன், ஆர்.வி.எஸ்., மைதானங்களில் நடந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த எஸ்.எம்.பி.எம்., அணி 20 ஓவர்களில் 126/6. முகமதுஅஸ்வாக் 37, கெவின்ரோஹித் 32, ரோஹித்ராஜ் 4 விக்கெட். சேசிங் செய்த எஸ்.எஸ்.எம்., அகாடமி அணி 18.5 ஓவர்களில் 122 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. விஷ்ணுகுமார் 36, கெவின்ரோஹித் 4 விக்கெட்.
வித்யாபார்த்தி நேஷனல் அகாடமி அணி முதலில் பேட்டிங் செய்து 9.5 ஓவர்களில் 48 க்கு ஆல் அவுட் ஆனது.
நாட்ரயதருண் 4, இகாஷ் 3 விக்கெட். சேசிங் செய்த பிரஸித்தி வித்யோதயா சீனியர் பள்ளி 5.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து வென்றது.
பப்ளிக் பள்ளி அணி 17 ஓவர்களில் 71 க்கு ஆல்அவுட் ஆனது. சுரஜ் 45, முகேஷ் 3 (ஹாட்ரிக்). சேசிங் செய்த அக்சுதா அகாடமி அணி 6.2 ஓவர்களில் 72/1 எடுத்து வென்றது. நத்தம் பேனியல் சி.பி.எஸ்.இ., அணி 14.2 ஓவர்களில் 15 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
வித்யாசாகர் 4 விக்கெட். சேசிங் செய்த பார்வதி அனுகிரஹா இண்டர்நேஷனல் பள்ளி 2 ஓவர்களில் 16/1 எடுத்து வென்றது.