/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காட்சிப்பொருளான உழவர் சந்தை புதுப்பித்தும் வராத விவசாயிகள் காட்சிப்பொருளான உழவர் சந்தை புதுப்பித்தும் வராத விவசாயிகள்
காட்சிப்பொருளான உழவர் சந்தை புதுப்பித்தும் வராத விவசாயிகள்
காட்சிப்பொருளான உழவர் சந்தை புதுப்பித்தும் வராத விவசாயிகள்
காட்சிப்பொருளான உழவர் சந்தை புதுப்பித்தும் வராத விவசாயிகள்
ADDED : செப் 24, 2025 06:24 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் ஆனந்தகிரி 7வது தெருவில் 2009 ல் உழவர் சந்தை கட்டமைக்கப்பட்டு செயல்பட்டது. 24 கடைகள் உள்ள சூழலில் கொடைக்கானல் மேல்மலை, தாண்டிக்குடி கீழ்மலை பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் உருவானது.
சில மாதங்கள் பெயரளவிற்கு செயல்பட்டு மூடுவிழா கண்டது. துவக்கம் முதலே உழவர் சந்தை அமைந்த இடம் குறித்து விவசாயிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
பொது போக்குவரத்து வசதியில்லாத சூழலில் விவசாயிகள், பொதுமக்கள் வந்து செல்ல தற்போதுள்ள இடம் பொருத்தமாக இல்லை என்பதால் இத்திட்டம் தோல்வியடைந்தது. இதற்கிடையே வேளாண் வணிகத்துறை 16 ஆண்டுகள் செயல்படாத உழவர் சந்தையை செயல்பாட்டில் உள்ளது போன்ற மாயயை ஏற்படுத்தி திறப்பு விழா செய்தனர். இருந்தப்போதும் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் மீண்டும் செயல்படாமல் உள்ளது.
சந்தை ஆடு, மாடு மேயும் மேய்ச்சல் பகுதியாக காட்சியளிக்கிறது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி விவேகானந்தன் கூறுகையில், ''கொடைக்கானல் ஆனந்தகிரி ஒதுக்குப்புறத்தில் செயல்படும் உழவர் சந்தையை துவக்கம் முதலே விவசாயிகள் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டினர்.
பொதுமக்கள், விவசாயிகள் வந்து செல்ல பொது போக்குவரத்து வசதி உள்ள மூஞ்சிக்கல், கலையரங்கம், பி.டி. ரோடு , வார சந்தை செயல்படும் பகுதியில் இடமாற்ற செய்ய கோரியும் நடவடிக்கை இல்லை.
மாவட்ட நிர்வாகம் விவசாயிகள், மக்கள் நலன் கருதி உழவர் சந்தையை விவசாயிகள் விருப்பத்திற்கிணங்க செயல்படுத்த வேண்டும் ''என்றார்