/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குறைகளை கூறினால் மிரட்டப்படுகின்றனர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு குறைகளை கூறினால் மிரட்டப்படுகின்றனர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
குறைகளை கூறினால் மிரட்டப்படுகின்றனர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
குறைகளை கூறினால் மிரட்டப்படுகின்றனர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
குறைகளை கூறினால் மிரட்டப்படுகின்றனர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
ADDED : செப் 23, 2025 04:44 AM

திண்டுக்கல்: ''தி.முக., மீது குறைகளை கூறினால் மிரட்டப்படுகின்றனர்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நாகல்நகரில் நடந்த அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அண்ணாதுரை இறந்தபின் எம்.ஜி.ஆர்., காலை பிடித்து கெஞ்சி கூத்தாடி முதல்வராக வேண்டும் என கேட்டவர் கருணாநிதி. அப்போது எம்.ஜி.ஆரின் தயவால் மட்டும்தான் முதல்வரானார். தி.மு.க., பா.ஜ.,வுடன் இருந்தால் நல்ல கூட்டணி, நாங்கள் வைத்தால் கெட்ட கூட்டணியா. தமிழகத்திற்கு உதவி வேண்டுமென்றால் மத்திய அரசை அனுசரித்து போக வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நன்மை கிடைக்கும். தி.முக., மீது குறைகளை கூறினால் மிரட்டப்படுகின்றனர் .ஜி.எஸ்.டி., வரி குறைந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பே பிரதமர் மோடி தீபாவளி பரிசு என தெரிவித்திருந்தார். பல ஆயிரம் கோடிகள் போனாலும் பரவாயில்லை என பல கோடி மக்களுக்கு நன்மை செய்துள்ளார் பிரதமர் மோடி. உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று இந்தியா சார்பில் சமாதனமாக, அன்பாக இருங்கள் என பிரதமர் சொல்கிறார். இதையெல்லாம் நாங்கள் பாராட்டினால் எதிர்க்கின்றனர். அமலாக்கத்துறையிடம் செந்தில்பாலாஜி மாட்டினால் தாமும் மாட்டுவோம் என பயத்தில் உள்ளது ஸ்டாலின் குடும்பம் என்றார்.
பகுதி செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், ராஜன், சேசு, முகமது இக்பால், முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட பேரவை செயலாளர் பாரதி முருகள், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்கண்ணன் வரவேற்றனர். அமைப்பு செயலாளர் ஆசை மணி, பேச்சாளர்கள் நெல்லையப்பன் பாலாஜி, சம்சுகனி, அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில பாசறை செயலாளர் பரமசிவம் பேசினர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், இணை செயலாளர் பழனிச்சாமி, தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன். முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்சா கலந்து கொண்டனர்.