/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி
30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி
30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி
30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி
ADDED : செப் 26, 2025 02:17 AM

ஒட்டன்சத்திரம்:'காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
அரசப்பபிள்ளைபட்டி அருகே ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டி பேசியதாவது: வடகிழக்கு பருவமழை காலங்களில் நங்காஞ்சி ஆற்றில் பெறப்படும் நீரானது இப்பகுதியில் விவசாய ஆதாரமாக உள்ளது. மழை நீரினை சேமிக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட இருக்கிறது. இதன் மூலம் அரசப்பபிள்ளைபட்டி கிராமத்தை சுற்றியுள்ள 35 கிணறுகள் மற்றும் 30 ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரும். 734 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாக பாசன வசதி பெறும். குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்றார். பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) செயற்பொறியாளர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், பிரபு பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், பாலு, முன்னாள் ஊராட்சி தலைவர் சக்திவேல் கலந்து கொண்டனர்.