/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மழை நீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தி ஜோர் மழை நீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தி ஜோர்
மழை நீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தி ஜோர்
மழை நீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தி ஜோர்
மழை நீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தி ஜோர்
ADDED : செப் 24, 2025 05:59 AM

சேதமான மின் கம்பம்
திண்டுக்கல் அருகே தோட்டனுாத்து ரோட்டில் மின்கம்பம் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது . எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை உள்ளதால் விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற வேண்டும். சகாயம், திண்டுக்கல்.
.ரோட்டில் தேங்கும் மழை நீர்
பழநி வையாபுரி குளத்து ரோட்டில் மழை நீர் தேங்கி அப்படியே நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி உள்ளதோடு பாதசாரிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டும். சரவணன், பழநி.
............---------சாக்கடையில் பிளாஸ்டிக் குப்பை
நிலக்கோட்டை அரசு பள்ளி அருகே சாக்கடையில் பிளாஸ்டிக் குப்பை சூழ்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது . கொசுகள் ஊற்பத்தியாகும் இடமாக உள்ளதால் ,பள்ளி சிறுவர்கள், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. ரதிஷ்பாண்டியன் - பொம்மணம்பட்டி.
கழிப்பிடமான நடைபாதை
திண்டுக்கல் சிறுமலை செட் செல்லும் வழியில் உள்ள டீ கடை அருகே நடைபாதையில் சிறுநீர், மலம் கழிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பிற கடைக்காரர்கள் பாதிக்கின்றனர்.இதை தடுக்க வேண்டும் முருகன், சிறுமலை செட்.
பைப் லைன் அமைக்க ரோடு சேதம்
பழநி -திண்டுக்கல் ரோடு ஆயக்குடியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் அமைப்பதற்காக ரோட்டை சேதப்படுத்தி குழி தோண்டப்பட்ட நிலையில் ,வேலை முடிந்த பிறகும் அப்படியே விட்டதால் பலரும் பாதிக்கின்றனர். ஜின்னா, மானுார்.
..............-------ரோட்டில் பாய்கிறது கழிவு நீர்
வடமதுரை திண்டுக்கல் ரோட்டில் வடிகால் கட்டமைப்பு அடைபட்டுள்ளதால் கழிவு நீர் ரோட்டில் பாய்கிறது. இதன் காரணமாக வாகனஓட்டிகள் உள்ளிட்டோர் பாதிக்கின்றனர். சீரமைப்பு பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜ், வடமதுரை.
பஸ் ஸ்டாண்டில் இடிப்பாடுகள்
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் கட்டட இடிப்பாடுகளை கொட்டி குவித்துள்ளனர் .இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது . நடைபாதையில் குவிந்துள்ள இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முனீஸ்வரன், திண்டுக்கல்.