/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆடுகளை கடித்து குதறும் தெருநாய்கள்பரவும் வீடியோ - விவசாயிகள் ஆவேசம் ஆடுகளை கடித்து குதறும் தெருநாய்கள்பரவும் வீடியோ - விவசாயிகள் ஆவேசம்
ஆடுகளை கடித்து குதறும் தெருநாய்கள்பரவும் வீடியோ - விவசாயிகள் ஆவேசம்
ஆடுகளை கடித்து குதறும் தெருநாய்கள்பரவும் வீடியோ - விவசாயிகள் ஆவேசம்
ஆடுகளை கடித்து குதறும் தெருநாய்கள்பரவும் வீடியோ - விவசாயிகள் ஆவேசம்
ADDED : மார் 18, 2025 01:34 AM
ஆடுகளை கடித்து குதறும் தெருநாய்கள்பரவும் வீடியோ - விவசாயிகள் ஆவேசம்
சென்னிமலை:சென்னிமலை யூனியன் கூத்தம்பாளையம் ஊராட்சி ஆலம்பாளையம் துலுக்கன்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன். ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இவரது தோட்டத்தில், 100 ஆடுகள் உள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்ததில் இரண்டு ஆடுகள் இறந்து விட்டன. 10 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன. மூன்று நாய்கள் சூழ்ந்து ஆடுகளை துரத்தி விளையாடியபடி கடித்துள்ளது.
இதேபோல் குறவன் தோட்டத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி தோட்டத்தில் புகுந்த தெருநாய்கள், இரு ஆடுகளை கடித்துள்ளது. இந்தகாட்சி அவரது தோட்டத்தில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது சென்னிமலை பகுதியில் பரவி வருகிறது. அதேபோல் அரியங்காடு மூர்த்தி தோட்டத்தில் புகுந்த நாய்கள் ஒரு கோழியை மட்டும் கடித்துள்ளன.
ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ள நிலையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கால்நடைத்துறை மருத்துவர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், சம்பவ இடங்களில் ஆய்வு நடத்தினர். இழப்பீட்டுக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தனர்.